×

தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

கன்னியாகுமரி: தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை சந்தையிக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக பண்டிகை முஹுர்த்த நாட்கள் இல்லாததால் மலர் சந்தையில்  பூக்கள் விலை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் நாளை தைப்பூச திருவிழா என்பதாலும் தொடர்ந்து சுப முகூர்த்த தினங்கள் வருவதாலும் பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு தோவாளை மலர் சந்தையில் கிலோ 1க்கு ரூ.700 விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,750 ஆகவும், மல்லிகை ரூ.600 யில் இருந்து ரூ.1500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று செவ்வந்தி, அரளி, தாமரை, கேந்தி உள்ளிட்ட பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.


Tags : Dowala Flower Market ,Kidu Kidu , Thaipusa Festival, Thovalai Flower Market, Price of Flowers, Hike
× RELATED ஆயுதபூஜையை ஒட்டி தோவாளை மலர்...